Special
Offers

சேமிப்புக் கணக்குகள்

Shreyshta

"விஷிஷ்ட" சேமிப்புக் கணக்கு

உங்கள் நிதி இலக்குகள் எதுவாக இருந்தாலும், உங்கள் சேமிப்பு அதிக வருமானத்தை ஈட்ட வேண்டியது அவசியம். Fintrex விஷிஷ்ட சேமிப்புக் கணக்கு கவர்ச்சிகரமான வட்டி வீதங்களையும் மதிப்புமிக்க நன்மைகளையும் வழங்குகிறது. நீங்கள் சேமிக்கத் தொடங்கினாலும் அல்லது உங்கள் செல்வத்தை பெருக்குவதற்கான நம்பகமான வழியைத் தேடினாலும், நிலையான நிதி எதிர்காலத்தை நோக்கிய உங்கள் பயணத்தைத் தொடங்க விஷிஷ்ட ஒரு சிறந்த வாய்ப்பை வழங்குகிறது. 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட நபர்கள் Fintrex விஷிஷ்டவுடன் தங்கள் சேமிப்புப் பயணத்தைத் தொடங்க அழைக்கப்படுகிறார்கள். குறைந்தபட்ச ஆரம்ப வைப்புத்தொகை ரூபா. 1,000 மட்டுமே.

Shreyshta

"சிரேஷ்ட" சிரேஷ்ட பிரஜைகளுக்கான சேமிப்புக் கணக்கு

எதிர்காலத்தை மலரச் செய்வதில் முக்கிய பங்கு வகித்த, தலைமுறைகள் செழித்து வளர, வெற்றிபெற மற்றும் வாழ்க்கையை அனுபவிக்க வலுவூட்டிய எங்கள் சிரேஷ்ட பிரஜைகளை Fintrex ல் நாங்கள் கௌரவிக்கிறோம். உங்கள் பங்களிப்புகளை அங்கீகரிக்கும் விதமாக, உங்களுக்காகவே பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட சேமிப்புக் கணக்குகளுக்கு பிரத்தியேகமான, அதிக வட்டி வீதங்களை நாங்கள் வழங்குகிறோம். நீங்கள் கடினமாக உழைத்து சம்பாதித்த சேமிப்பிலிருந்து தொடர்ந்து பயனடைவதையும், எதிர்காலத்தில் வசதியான, நிறைவான வாழ்க்கையை அனுபவிப்பதையும் உறுதி செய்வதே எங்கள் குறிக்கோள்.

Shreyshta

பணச் சந்தை சேமிப்புக் கணக்கு

எங்கள் Flexy Fix கணக்கு கவர்ச்சிகரமான வட்டி வீதங்களை வழங்குகிறது, குறுகிய கால முதலீட்டின் நன்மைகளுக்கு மீள்வரைவிலக்கணம் வகுக்கிறது.

Fintrex Flexy Fix பணச் சந்தை சேமிப்புக் கணக்கு, உடனடி வருமானத்துடன் கூடிய குறுகிய கால முதலீடுகளுக்கான மேம்பட்ட நிதி முகாமைத்துவத் தெரிவுகளைத் தேடும் நிறுவன வாடிக்கையாளர்கள், செல்வந்த தனிநபர்கள் மற்றும் சிறிய முதல் நடுத்தர அளவிலான தொழில் நிறுவனங்கள் (SME) ஆகியவற்றிற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. "குறுகிய காலத்தில் அதிக வருமானத்தை" வழங்க உறுதிபூண்டுள்ள Flexy Fix பணச் சந்தை சேமிப்புக் கணக்கு, தனிப்பட்ட விருப்பங்களுக்கு ஏற்ப குறுகிய கால முதலீடுகளை நிர்வகிக்கத் தேவையான நெகிழ்வுத்தன்மையை வழங்குகிறது.

முக்கிய அம்சங்கள்:
  • ஒப்பீட்டளவில் சிறந்த வட்டி வீதங்களுடன் கூடிய கட்டமைப்பு
  • நெகிழ்வான மீளப் பெறும் தெரிவுகள்
  • தினசரி வட்டி கணிப்பீடு
  • கூட்டுக் கணக்குகளை ஆரம்பிக்கும் ஆற்றல்
  • பிரத்தியேகமான நிதி ஆலோசனை
FLEXY FIX
கணக்கு மீதி வட்டி வீதம்
ரூபா. 99,999/- இலும் குறைவு 4.00%
ரூபா.100,000/- முதல் ரூபா.499,999/- 5.00%
ரூபா.500,000/- முதல் ரூபா.999,999/- 5.75%
ரூபா.1,000,000/- முதல் ரூபா.1,999,999/- 6.00%
ரூபா.2,000,000/- முதல் ரூபா.4,999,999/- 7.00%
ரூபா.5,000,000/- மற்றும் அதற்கு மேல் 7.50%
Shreyshta

பென்னம்பெரிய கனவுகள், சின்னஞ்சிறியவர்கள் - அவர்களுடன் வளரும் சேமிப்பு - பிரவிஷ்டா

செழிக்கும் சேமிப்புடன் உங்கள் குழந்தையின் எதிர்காலத்தில் முதலீடு செய்யுங்கள். பிரவிஷ்டா கணக்கு 10 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட சிறுவர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது, அவர்களின் சேமிப்பு வளர உதவும் வகையில் கவர்ச்சிகரமான வட்டி வீதங்களை வழங்குகிறது.

சேமிப்பு கணக்கு வீதங்கள்

சேமிப்பு வகை வீதம் கணக்கு ஆரம்ப மீதி
VISHISTA 4.00% Rs. 1,000.00
SHRESTHA 4.50% Rs. 1,000.00
PRAVISHTA 5.00% Rs. 1,000.00
CASH BUILD UP 2.50% Rs. 1,000.00
PRAVISHTA 2 4.00% Rs. 1,000.00

Explore Details

எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்

+94 773 586 445

(Dinuk)

REACH OUT ON WHATSAPP

இப்போது அழைக்கவும்
உங்கள் தேவையை எங்களிடம் கூறுங்கள்