Special
Offers

EASY லீசிங்

Easy leasing logo

உங்கள் கனவுகளை நனவாக்க நாங்கள் முயற்சி செய்கிறோம்...

உங்கள் கனவு வாகனத்தை வாங்குவதாக இருந்தாலும் சரி அல்லது உங்கள் வணிகத்தை விரிவுபடுத்துவதாக இருந்தாலும் சரி, உங்கள் வெற்றி தொடர்ந்து வளர்ச்சி கண்டு வருவதால், நீங்கள் இருக்கும் இடத்திலேயே வழங்கப்படும் சௌகரியமான பல்வேறு சேவைகளைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

உங்கள் ஆட்டோ காத்திருக்கிறது - பதிவுசெய்யப்பட்டது அல்லது புத்தம் புதியது!

உங்களுடைய கனவு வாகனத்தை ஓட்டிச் செல்லுங்கள் - பதிவுசெய்யப்பட்டது என்றாலும் சரி அல்லது காட்சியறையிலிருந்து புதிதாக வெளியில் கொண்டு வந்தது என்றாலும் சரி!

சூழல்நேயத்திற்கு எடுப்பாகச் செல்லுங்கள் - பதிவுசெய்யப்பட்டது அல்லது புத்தம் புதியது

Dealer Details

நன்மைகள்

கவர்ச்சிகரமான குத்தகை வட்டி வீதங்கள்
5 ஆண்டுகள் வரையான கொடுப்பனவு விதிமுறைகள்
பிரத்தியேக குத்தகை / மீள்கொடுப்பனவுத் திட்டங்கள்
விரைவான அங்கீகார நடைமுறை
பிரத்தியேக நிதி ஆலோசனை

தகுதி

சம்பளம் பெறும் பணியாளராக, சுயதொழில் செய்யும் தனிநபராக, சிறிய அல்லது நடுத்தர தொழில் முயற்சியாக, அல்லது நிறுவன வாடிக்கையாளராக இருக்க வேண்டும்
18 முதல் 60 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும், மேலும் செல்லுபடியாகும் தேசிய அடையாள அட்டை அல்லது சாரதி அனுமதிப் பத்திரம் வைத்திருக்க வேண்டும்.

உங்கள் வருமானத்திற்கு ஏற்ற சிக்கனமான திட்டங்களுடன் நெகிழ்வான வாகன குத்தகையைப் பெறுங்கள். அது நான்கு சக்கர வாகனமாக இருந்தாலும், மூன்று சக்கர வாகனமாக இருந்தாலும், அல்லது இரு சக்கர வாகனமாக இருந்தாலும், விரைவான அங்கீகார நடைமுறை மற்றும் பிரத்தியேக சேவையுடன் Fintrex வாகன உரிமையை எளிதாக்குகிறது.

விசேட அம்சங்கள்

  • விரைவான நடைமுறை மற்றும் கடன் வழங்கல்
  • நெகிழ்வான மீள்கொடுப்பனவுத் திட்டங்கள்
  • விருப்பத்திற்குரிய காப்புறுதி நிறுவனங்கள் மூலம் விசேட காப்புறுதித் திட்டங்கள்
  • உங்கள் மீள்கொடுப்பனவுத் திறனுக்கு ஏற்றவாறு பிரத்தியேகமான குத்தகைத் திட்டங்கள்
  • குத்தகையின் மீதமுள்ள தொகையில் 40% வரை செலுத்தும் தெரிவு

விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டது

தவணைக்காலத்தின் முடிவில் மூலதனக் கொடுப்பனவைச் செலுத்தும் நெகிழ்வுடன், மாதாந்த வட்டியை மட்டும் செலுத்துவதன் மூலம் ஒரு வாகனத்தை சொந்தமாக்க அல்லது உங்கள் தற்போதைய வாகனத்திற்கு மீளவும் கடன் நிதியைப் பெற்றுக் கொள்ள Smart Draft உங்களுக்கு இடமளிக்கிறது.

விசேட அம்சங்கள்

  • கடன் தவணைக் காலம் முழுவதும் பல்வேறு தடவைகளில் மூலதனத்தை திருப்பிச் செலுத்தும் சாத்தியம்
  • மாதாந்த வாடகையாக வட்டியை மட்டுமே செலுத்த இடமளிக்கும் எளிதான கொடுப்பனவுத் தெரிவு
  • குறைந்தபட்ச கட்டணங்கள்

விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டது

உங்கள் தொழிற்பாட்டு மூலதனத் தேவைகளுக்கு கடன் பெற உங்களுக்குச் சொந்தமான வாகனத்தை உடனடி பணமாக மாற்றலாம். இந்த கடன் வசதி முற்கூட்டியே அங்கீகரிக்கப்பட்ட எல்லை வரை நிதியை பெற உங்களுக்கு இடமளிக்கிறது. உங்கள் கடன் எல்லைக்குகுள் பணத்தை மீளப்பெறவும், திருப்பிச் செலுத்தவும், மீண்டும் உங்கள் நிதியை அணுகவும் முடியும்.

விசேட அம்சங்கள்

  • முற்கூட்டியே அங்கீகரிக்கப்பட்ட கடன் எல்லைக்குள் தேவைக்கேற்ப பல முறை பணம் பெறும் நெகிழ்வுத்தன்மை
  • கடன் வசதியின் தவணைக்காலம் முழுவதும் மூலதனத்தை திருப்பிச் செலுத்தும் சாத்தியம்
  • கடன் பெறப்பட்ட சொத்து கடன் வாங்குபவரின் பெயரில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.
  • குறைந்தபட்ச கட்டணங்கள்

விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டது

உங்கள் முச்சக்கர வண்டி கனவை நிறைவேற்றுங்கள்.

Fintrex Dream Wheel தீர்வு, சிக்கனமான, சௌகரியமான மற்றும் பிரத்தியேக கடன் தெரிவுடன் முச்சக்கர வண்டிகளை வாங்க அல்லது மீள்கடன் வசதி பெற உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

விசேட அம்சங்கள்

  • ஒரு மணி நேரத்திற்குள் விரைவான அங்கீகாரம் மற்றும் நிதியை விரைவாக விடுவித்தல்
  • 2001 ஆம் ஆண்டு முதல் உற்பத்தி செய்யப்பட்ட பஜாஜ் முச்சக்கர வண்டிகளுக்கு கிடைக்கப்பெறல்
  • 50% வரையிலான கடன்களுக்கு உத்தரவாதம் தேவையில்லை
  • 5 ஆண்டுகள் வரை மீள்கொடுப்பனவு விதிமுறைகள்
  • கவர்ச்சிகரமான காப்புறுதித் திட்டங்கள்
  • குறைந்தபட்ச ஆவண தேவைப்பாடு

விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டது

Fintrex Speed Wheel உங்கள் கனவு பைக்கை ஒரு நொடியில் சொந்தமாக்கிக் கொள்ள இடமளிக்கிறது.

நீங்கள் ஒரு புதிய பைக்கை வாங்க விரும்பினாலும் சரி அல்லது உங்கள் தற்போதைய பைக்கின் மதிப்பை அதிகரிக்க விரும்பினாலும் சரி, நாங்கள் உங்களுக்கு வாய்ப்பு அளிக்கிறோம். எங்கள் நெகிழ்வான குத்தகை தெரிவுகள், பைக்கை உடனடியாக சொந்தமாக்கவோ அல்லது உங்களிடம் இருக்கும் பைக்கை உடனடி பணமாக மாற்றவோ இடமளிக்கின்றன. இப்போதே விண்ணப்பித்து, ஒய்யாரமாக சவாரி செய்யுங்கள்!

விசேட அம்சங்கள்

  • ஒரு மணி நேரத்திற்குள் விரைவான அங்கீகாரம் மற்றும் நிதியை விரைவாக விடுவித்தல்
  • பைக்கின் மதிப்பில் 50% க்கும் குறைவான கடன் வசதிக்கு உத்தரவாதம் தேவையில்லை
  • குறைந்தபட்ச ஆவண தேவைப்பாடு

விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டது

தனிப்பட்ட வாகன கடன் தேவைகளுக்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட மாறுபடும் வாடகை தெரிவுகளுடன் கூடிய எங்கள் குறைந்த செலவுடனான Auto Loan மூலம் பயனடையுங்கள். இந்த நெகிழ்வான கடன் மாறிவரும் சந்தை நிலைமைகளுக்கு ஏற்ப தன்னை மாற்றியமைக்கிறது, உங்கள் தனிப்பட்ட வாகனத்திற்கு சிக்கனமான கடனை உறுதி செய்கிறது.

விசேட அம்சங்கள்

  • விரைவான நடைமுறை மற்றும் கடன் வழங்கல்
  • நெகிழ்வான மீள்கொடுப்பனவுத் திட்டங்கள்
  • குறைந்தபட்ச கட்டணங்கள்
  • கடனின் மீதமுள்ள தொகையில் 40% வரை செலுத்தும் தெரிவு.

விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டது

Explore Details

எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்

+94 77 759 8203

(Amila)

REACH OUT ON WHATSAPP

இப்போது அழைக்கவும்
உங்கள் தேவையை எங்களிடம் கூறுங்கள்