Special
Offers

எங்களைப் பற்றிய அறிமுகம்

Fintrex Finance Limited நிறுவனமானது, Bluestone 1 (Pvt) Limited நிறுவனத்தின் உரிமையாண்மையின் கீழ் இயங்குவதுடன், சிறப்பாக நிரூபிக்கப்பட்ட வரலாற்று பதிவுகளைக் கொண்ட பணிப்பாளர் சபைத் தலைவர் திரு அஜித் குணவர்தன, மற்றும் திரு றொணி பீரிஸ் மற்றும் திரு சாந்தனு நேக்பால் ஆகியோரின் வழிகாட்டலின் கீழ் செயற்பட்டு வருகிறது. Fintrex நிறுவனத்தின் மூலோபாய இலக்கு மற்றும் வளர்ச்சி ஆகியவற்றுக்கு அவர்கள் சிறப்பாக வழிகாட்டி வருகின்றனர்.

Fintrex ஆனது ஆரம்பத்தில் Melsta Regal Finance Ltd என அறியப்பட்டதுடன், Melstacorp PLC நிறுவனத்தின் முழுமையான உரிமையாண்மையின் கீழானது. இதன் உரிமையாண்மையானது, இலங்கையில் நம்பத்தகுந்த கூட்டு நிறுவனங்கள் குழுமம் ஒன்றிடம் இருந்து, நம்பிக்கை மிக்க பல்தேசிய நிறுவனமான Bluestone 1 (Pvt) Limited க்கு கைமாறியமை Fintrex நிறுவனத்தின் வலிமை மற்றும் நெகிழ்திறனை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளதுடன், நிறுவனம் தனது நீண்ட கால இலக்குகளை அடையும் பயணத்திற்கு அதற்கு வலுவூட்டியுள்ளது.

"Fintrex" என்னும் பெயரானது 'நிதியியல் தொழில்முயற்சியாளர்கள்' மற்றும் 'நிபுணர்கள்' ஆகிய சொற்களில் இருந்து உருவாக்கப்பட்டது. இது ஏனைய நிறுவனங்கள் மத்தியில் தனித்துவமாகத் தோற்றமளிப்பதற்கான புத்தாக்கம் மற்றும் நிபுணத்துவம் ஆகியவற்றின் வலுவான இணைப்பை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. புதிய வர்த்தகநாம அடையாளமானது, Fintrex தனது வளர்ச்சி வாய்ப்புக்களை அதியுச்ச அளவில் வெளிக்கொண்டு வந்து, வாடிக்கையாளர்களுக்கு மதிப்பை வழங்குவதற்கு வழிவகுக்கிறது. மிக வேகமாக பரிணாம மாற்றம் கண்டு வரும் சந்தையில், நடவடிக்கை, வேகம் மற்றும் சுறுசுறுப்பு ஆகியவற்றின் மீதான வலுவான கவனத்தை இது பிரதிபலிக்கிறது.

Fintrex நிறுவன தலைமைத்துவமானது, தொழிற்துறை மத்தியில் மிகச் சிறந்த நடைமுறைகளை உள்வாங்கி, ஊழியர்களின் மேம்பாட்டில் முக்கிய கவனம் செலுத்துவதற்கு முன்னுரிமையளித்துள்ளது. விரிவான பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டு நிகழ்ச்சித்திட்டங்கள் மூலமாக, வலுவான, மிகவும் போட்டி மிக்க சூழலில் சிறப்பாகச் செயற்படுவதற்குத் தேவையான தொழில்நுட்ப அறிவு மற்றும் திறன்களை Fintrex தனது அணிக்கு வழங்கி வருகிறது.

எதிர்காலத்தைப் பொறுத்தவரையில், நவீன வாடிக்கையாளர்கள் மத்தியில் பரிணாம மாற்றம் கண்டுவருகின்ற பரிவர்த்தனை போக்குகள் மற்றும் எதிர்பார்ப்புக்களுடன் ஒருங்கிணையும் வகையில் தொழிற்பாட்டுத் திறனை மேம்படுத்துவதற்கு நவீன தொழில்நுட்பத்தை உள்வாங்குவதை மையமாகக் கொண்ட மூலோபாயத் திட்டத்தை Fintrex கொண்டுள்ளது. இந்த டிஜிட்டல் பரிணாம மாற்றத்தின் ஒரு பகுதியாக, புத்தாக்கம் கொண்ட தீர்வுகள் மூலமாக இயற்கை வளங்களில் தங்கியிருப்பதைக் குறைத்து, நிலைபேணத்தக்க வழியில் தனது செயற்பாடுகள் இடம்பெறுவதை உறுதி செய்து, சூழல் மீதான தாக்கத்தை குறைவுபடுத்துவதிலும் Fintrex அர்ப்பணிப்புடன் உள்ளது.

நிறுவன தகவல்கள்

நிறுவனத்தின் பெயர் Fintrex Finance Limited
சட்ட அந்தஸ்து 2007ம் ஆண்டு 07ம் இலக்க கம்பனி சட்டத்தின் கீழ் பொறுப்பு வரையறுக்கப்பட்ட பொது கம்பனியாக கூட்டிணைக்கப்பட்டது.
2011ம் ஆண்டு 42ம் இலக்க நிதி வியாபார சட்டத்தின் கீழும் 2000ம் ஆண்டு 56ம் இலக்க நிதி குத்தகை சட்டத்தின் கீழும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
வியாபார பதிவு இலக்கம் PB878
வியாபார பதிவு இலக்கம் PB878
கூட்டிணைக்கப்பட்ட திகதி 2007 மார்ச் 29
பெயர் மாற்றம் செய்யப்பட்ட திகதி 2018 செப்டெம்பர் 3
பதிவு செய்யப்பட்ட முகவரி இல.851, டாக்டர் டனிஸ்டர் டி சில்வா மாவத்தை (பேஸ்லைன் வீதி) கொழும்பு 14.
கணக்காய்வாளர்கள் மே/பா Ernst and Young Chartered Accountants, 201, டி சேரம் பிளேஸ், கொழும்பு 10.
கணக்காய்வாளர்கள்

Nithya Partners
97A, காலி வீதி, கொழும்பு 03.

Shiranthi Gunawardena Associates
இல.22/1, எலியட் பிளேஸ், கொழும்பு 08

Paul Rathnayake Associates
இல 59 கிறெகரிஸ் பிளேஸ், கொழும்பு 07.

கம்பனி காரியதரிசி திருமதி அருணி குணவர்தன
இல.851, டாக்டர் டனிஸ்டர் டி சில்வா மாவத்தை (பேஸ்லைன் வீதி) கொழும்பு 14.

தொலைநோக்கு, குறிக்கோள், விழுமியங்கள்

தொலைநோக்கு

நாம் ஈடுபடும் அனைவருக்கும் மதிப்பை உருவாக்குவதன் மூலம் முதல் 5 நிதி தீர்வு வழங்குநர்களுள் இடம்பெறுதல்.

குறிக்கோள்

மதிப்பை உருவாக்குதல்:

  • எங்கள் வாடிக்கையாளர்களுக்கு புத்தாக்கத்துடனான தொழில்நுட்பம் மூலம் அவர்களுடைய வசதிக்கேற்ப சேவைகளை வழங்குதல்.
  • சிறந்த சேவையை வழங்க எங்கள் ஊழியர்களை மேம்படுத்தி வலுவூட்டுதல்
  • எங்கள் பங்குதாரர்களுக்கு வருமானத்தை மேம்படுத்துதல்.
  • சிறந்த ஆட்சி நிர்வாகத்தை எமது சமூகத்திற்கு உறுதி செய்தல்
  • அவர்களின் நல்வாழ்வின் மூலமாக எமது தேசத்திற்குப் பங்களித்தல்

விழுமியங்கள்

  • நியாயம் நாங்கள் மக்களை சமமாக நடத்துகிறோம்
  • புத்தாக்கம் நாங்கள் மேற்கொள்ளும் அனைத்திலும் படைப்பாற்றலைத் தேடுகிறோம்
  • வளர்ப்பு எங்கள் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களை மேம்படுத்துகிறோம்
  • வெளிப்படை எங்கள் அனைத்து நடவடிக்கைகளிலும் நாங்கள் வெளிப்படையாகவும் நேர்மையாகவும் இருப்போம்
  • மரியாதை அனைவரையும் கண்ணியத்துடன் நடத்துகிறோம்
  • உயர்த்துதல் எங்கள் நாட்டின் சமூக நல்வாழ்வை மேம்படுத்த உதவுகிறோம்
  • உபசரிப்பு எங்கள் அனைத்து பங்குதாரர்களிடமும் நாங்கள் உண்மையுள்ளவர்கள்

விருதுகள்

Great Place to Work Certified 2022 - 2023 (second consecutive year)

Most Respected Entities In Sri Lanka 2022

Fastest growing finance company in Sri Lanka 2021

Fastest growing finance company in Sri Lanka 2021

பணிப்பாளர் சபை

அஜித் குணவர்தன
தலைவர்
றொனி பீரிஸ்
சுயாதீனமற்ற, நிர்வாக அதிகாரமற்ற பணிப்பாளர்
ஷாந்தனு நேக்பால்
சுயாதீனமற்ற, நிர்வாக அதிகாரமற்ற பணிப்பாளர்
அஹமட் சப்ரி இப்ராஹிம்
சுயாதீன, நிர்வாக அதிகாரமற்ற பணிப்பாளர்
ஸ்ரீஹான் பி.பெரேரா
சுயாதீன, நிர்வாக அதிகாரமற்ற பணிப்பாளர்
நிலாம் ஜயசிங்க
சுயாதீன, நிர்வாக அதிகாரமற்ற பணிப்பாளர்
ஃபொணி டி பொன்சேகா
சுயாதீன, நிர்வாக அதிகாரமற்ற பணிப்பாளர்
இந்திரஜித் விக்கிரமசிங்க
சுயாதீனமற்ற, நிர்வாக அதிகாரமற்ற பணிப்பாளர்

நிறுவன முகாமைத்துவம்

ஜயதிலக பண்டா
பொது முகாமையாளர் பிரதம நிறைவேற்று அதிகாரி
தினேஷ் குணசேகர
உதவிப் பொது முகாமையாளர் - வணிக வழிமுறைகள் மேம்பாடு
நிஷாந்த ஹெட்டியாராச்சி
பிரதம தகவல் அதிகாரி
சஞ்சீவ புவனேகபாகு
மனிதவளங்கள் மற்றும் நிர்வாக தலைமை அதிகாரி
நிரோஷன் கருணாதிலக
பிரதம உள்ளக கணக்காய்வாளர்
கமல் குமாரசிங்க
உதவிப் பொது முகாமையாளர் - மீள் அறவீடுகள் மற்றும் துறை முகாமைத்துவம்
நாமல் சுமனரத்ன
கடன் துறை தலைமை அதிகாரி
மஞ்சுள தென்னகோன்
பிரதம நிதி அதிகாரி