Special
Offers

தங்கக் கடன்

Wishwasa

"ரன் சக்தி" தங்கக் கடன் வசதி

ரன் சக்தி தங்கக் கடன் வசதி மூலம் உங்கள் தங்கத்தின் மதிப்பை வெளிப்படுத்துங்கள், உங்களுக்குத் தேவைப்படும்போது உங்களுக்குத் தேவையான நிதியை வழங்குகிறது. ரன் சக்தி மூலம், உங்கள் தங்க நகைகளுக்கு எதிராக ஒப்பீட்டளவில் மிகச் சிறந்த வட்டி வீதங்களுடன் அதிக கடன் தொகைகளைப் பெறலாம். இது எதிர்காலத்திற்கான உங்கள் நிதி ஸ்திரத்தன்மையை உறுதி செய்யும்.

எங்கள் ரன் சக்தி தங்கக் கடன் வசதி உங்கள் சௌகரியத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட கிளைகளில் கிடைக்கிறது. அனைத்து கொடுக்கல்வாங்கல்களும் முழுமையான இரகசியத்தன்மை மற்றும் பாதுகாப்புக்கான உத்தரவாதத்துடன். உங்கள் மதிப்புமிக்க தங்கப் பொருட்கள் மிகுந்த கவனத்துடன் பாதுகாக்கப்படுகின்றன. உங்களுக்கு கிடைக்கவேண்டிய நிதி உதவியை அணுகும்போது உங்களுக்கு மன நிம்மதியை அளிக்கின்றன.

வட்டிக் கொடுப்பனவு தெரிவுகள்:
  • முதிர்ச்சியின் போது வட்டியுடன் சேரும் வைப்புத்தொகைகள்
  • மாதாந்த மற்றும் வருடாந்த வட்டி செலுத்தும் தெரிவுகள்

உங்கள் தங்க நகைகளுக்கு முழுமையான காப்புறுதி தானாகவே வழங்கப்படும்.

சமீபத்திய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உங்கள் தங்கத்திற்கான துல்லியமான மதிப்பீடு.

மற்ற வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்களில் நீங்கள் கடன் வசதி பெற்றுள்ள தங்கத்தை எங்களுக்கு மாற்றிக்கொள்ள இடமளிக்கும் தங்குதடையற்ற கடன் பொறுப்பேற்கும் சேவையை வழங்குகிறது.

நன்மைகள்

உங்கள் தங்கத்தின் தற்போதைய சந்தை மதிப்பின் அடிப்படையில் அதிகூடுதல் முற்பணத்தைப் பெறுங்கள்.
உங்கள் விருப்பங்களின் அடிப்படையில் 1, 3, 6, 9 மற்றும் 12 மாதங்களுக்கு நெகிழ்வான மீள்கொடுப்பனவுத் திட்டங்கள் கிடைக்கப்பெறுகின்றன.
add-user-male
பொறுப்பேற்கும் நகைகளுக்கான நிதி தீர்வுகள்.
விரைவான சேவையுடன் பிரத்தியேக நிதி ஆதரவு.
முன் அறிவிப்பு தேவையில்லை, விரைவான மற்றும் வசதியான மீட்பு வழி.

தகுதி

செல்லுபடியாகும் தேசிய அடையாள அட்டை அல்லது சாரதி அனுமதிப் பத்திரத்தைக் கொண்ட 18 வயது அல்லது அதற்கு மேற்பட்ட இலங்கை பிரஜையாக இருக்க வேண்டும்.

Explore Details

எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்

+94 77 652 4208

(Samson)

REACH OUT ON WHATSAPP

இப்போது அழைக்கவும்
உங்கள் தேவையை எங்களிடம் கூறுங்கள்